Categories: சினிமா

என்னப்பா இப்படி ஆயிடுச்சு? – தங்கலான் படத்தை பத்தி ஆஹா ஓஹோன்னு பேசினாங்க, இந்த படத்தை பிரபல சேனலில் வெளியிட மறுத்துட்டாங்களாமே?

Spread the love

சியான் விக்ரம், தமிழ் சினிமாவில் ஒரு ஆகச் சிறந்த கலைஞனாக மதிக்கப்படுபவர். சேது, காசி, அந்நியன், ஐ என அந்த படங்களில் அவர் ஏற்று நடித்திருந்த கேரக்டர்களும், அதற்காக அவர் செய்த தியாகங்களும், ஒரு கலைஞனுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது. உலகநாயகன் கமலுக்கு அடுத்தபடியாக, கேரக்டர் சிறப்பாக வர, தன்னை வருத்திக் கொள்ளும் நடிகராக இரண்டாம் இடத்தில் இருப்பவர்தான் சியான் விக்ரம்.மனநலம் பாதிக்கப்பட்டவராக, கண் பார்வை இல்லாதவராக, அப்பாவியாக, கொடூர நோய் தாக்கிய நோயாளியாக என, தனக்கான கேரக்டர் எதுவாக இருந்தாலும் அதில் தனி முத்திரை பதித்து, இவரை விட யாரும் அதை சிறப்பாக செய்துவிட முடியாது என நினைக்கிற அளவுக்கு தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்துபவர். துவக்கத்தில் படங்களில் நடிக்க வாய்ப்பின்றி பல படங்களில் பல நடிகர்களுக்கு சியான் விக்ரம் பின்னணி குரல் கொடுத்த காலமும் உண்டு. இயக்குநர் பாலா இயக்கிய சேது தான் இவரை அடையாளம் காட்டியது.இப்போது, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சியான் விக்ரம். இந்த படத்தில் நடிக்க, தினமும் 3 மணி நேரம் அவருக்கு மேக்கப் போடப்படுமாம். இந்த படத்தை ரப் காப்பியை பார்த்து, பா. ரஞ்சித் அசந்து போயிருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை விட, சர்வதேச அளவில் சிறந்த திரைப்படமாக, ஆஸ்கர் விருது பெறும் தகுதிகளை கொண்ட படமாக, தங்கலான் இருப்பதாக பெருமைப்பட்டு இருக்கிறார். ஆனால், இந்த படத்தை பார்த்த ஒரு முன்னணி சாட்டிலைட் சேனல், இதை நாங்கள் வெளியிட விரும்பவில்லை. இந்த படம் எங்களுக்கு வேண்டாம் என மறுத்து விட்டது. தங்கலான் படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்தால், இப்படி முக்கிய சேனல் வேண்டாம் என மறுத்திருப்பது பயங்கர அதிர்ச்சியை, படக்குழுவினருக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

admin

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

2 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

3 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

3 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

3 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

4 மணத்தியாலங்கள் ago