80-களில் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்தவர் மைக் மோகன். தமிழ் சினிமாவில் மூடுபனி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முன்னதாக கன்னடத்தில் வெளியான கோகிலா என்ற படத்தின் மூலம் திரையுரையில் அறிமுகமானார். இவர் நடித்த படங்கள் எண்பதுகளில் சூப்பர் ஹிட் ஆனது. ரெட்டைவால் குருவி, மௌன ராகம், இதய கோவில் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் மோகன் நடித்துள்ளார்.
90-களுக்குப் பிறகு மோகன் நடித்த படங்கள் அவ்வளவாக வரவேற்பை வரவில்லை. தற்போது ஹரா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மோகன் ரீ என்ட்ரி ஆக உள்ளார். ஏற்கனவே தளபதி நடிக்கும் 68-வது படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.
ரொமான்டிக் ஹீரோவாக பார்த்த மோகனை வில்லனாக பார்க்க ரசிகர்கள் அவளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மோகன் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுக்கும் படத்தில் முதலில் குஷ்பூ கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அவருக்கு பதிலாக நடிகை அனுமோல் மோகனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அனுமோல் கடந்தாண்டு வெளியான வெப் சீரியஸில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். படம் முடிவதில் ஏற்பட்ட தாமதமே இந்த மாற்றத்திற்கு காரணம் என படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி கூறியிருக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு, அனித்ரா நாயர், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…