அதிர்ச்சி… தீபாவளிக்கு பின் மூச்சுத்திணற வைக்கும் தில்லி… நுரையீரலை குளிரவைத்த அய்சால்… இணையத்தில் வெடித்த பெரும் விவாதம்…!

By Swetha on கார்த்திகை 10, 2026

Spread the love

மிசோரம் தலைநகர் அய்சாலில் தீபாவளிக்குப் பிந்தைய காற்றுத் தரக் குறியீடு 56 ஆக மட்டுமே இருந்ததாகக் கனடா நாட்டைச் சேர்ந்த கெலப் ப்ரைசன் என்ற நபர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் வசிக்கும் இவர், தீபாவளி அன்று அய்சாலில் ஒரு பட்டாசு சத்தம் கூட கேட்கவில்லை என்றும், இதனால் தனது குடும்பத்தினரும் வளர்ப்பு நாய்களும் நிம்மதியாக உறங்கினர் என்றும், தங்களின் நுரையீரல்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீபாவளிக்கு மறுநாள் புகைமூட்டம் அதிகரித்து, காற்றுத் தரக் குறியீடு 400-ஐத் தாண்டி ‘மிகவும் மோசம்’ மற்றும் ‘கடுமையான’ நிலையை எட்டிய வேளையில் இந்தப் பதிவு வெளியானது. தில்லியின் மாசுபட்ட காற்றுடன் ஒப்பிட்டு அய்சாலின் தூய்மையான சூழலை கெலப் பாராட்டியது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

கெலப்பின் இந்த கருத்துக்கு சமூக வலைதளப் பயனர்கள் இருவேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு தரப்பினர் அய்சாலின் தூய்மையான வானத்தையும் விழிப்புணர்வுள்ள அந்த சமூகத்தையும் பாராட்டியுள்ளனர். ஆனால் மற்றொரு தரப்பினரோ, மிசோரமில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அங்கு தீபாவளி கொண்டாட்டம் குறைவாக இருப்பது இயல்புதான் என்றும், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இதே அய்சால் நகரம் புகை மண்டலமாக மாறும் என்றும் விமர்சித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.