Categories: சினிமா

அவர் எவ்ளோ பெரிய நடிகர்… அவர் போய் என் கால பிடிப்பதா… சீன மாத்துங்க – கோபமான விஜயகாந்த்!

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

எம் ஜி ஆர் போலவே விஜயகாந்தும் திரையில் நடிக்கும் போது சில கொள்கைகளை கடைபிடித்தார். பெரும்பாலும் மது மற்றும் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்துவிடுவார். அதுபோல பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்வது போலவோ அல்லது அடிப்பது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார்.

இப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பிரபல நடிகர் டெல்லி கணேஷ் பகிர்ந்துள்ளார். விஜயகாந்தின் மரணத்துக்குப் பின்னர் அளித்த ஒரு நேர்காணலில் ”ஒரு படத்தில் விஜயகாந்தின் அப்பாவாக நான் நடித்தேன். ஒரு காட்சியில் அவர் கால் வலிக்கிறது என சொல்வார். நான் அவரின் காலை பிடித்துவிடுவது போல் காட்சி. அதை இயக்குனர் விஜயகாந்துக்கு விளக்கியபோது அந்த காட்சியில் நடிக்க விஜயகாந்த் சம்மதிக்கவில்லை.

இயக்குனரிடம் கோபமாக “அவர் எவ்வளவு பெரிய நடிகர்.. வயதில் மூத்தவர். அவர் போய் என் காலை பிடிப்பதா?.. காட்சியை மாற்றுங்கள் என சொல்லிவிட்டார். இதை இயக்குனர் என்னிடம் வந்து சொன்னபோது நானே விஜயகாந்த் சாரிடம் போய் அவரை சமாதானப்படுத்தினேன். அவரிடம்  ‘என்னை டெல்லி கணேஷாக பார்க்க வேண்டும். கதைப்படி மகன் மேல் பாசமாக இருக்கும் அப்பா அதை செய்கிறார். அப்படி மட்டும் பாருங்கள்’ என சொன்னேன். அதன் பிறகுதான் அவர் அந்த காட்சியில் நடிக்க சம்மதித்தார்.

அந்த காட்சியில் நான் அவரின் காலை தொடும்போது என்னை தொட்டு கும்பிட்டு தயங்கியபடியே நடித்தார். அப்படிப்பட்டவர்தான் விஜயகாந்த்.” என டெல்லி கணேஷ் நெகிழ்ந்து போய் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago