இசையமைப்பாளர் இளையராஜா அவர் இசையமைத்த பாடல்களை வேறு திரைப்படங்களில் பயன்படுத்தக் கூடாது. மற்ற ஆடியோ நிறுவனங்களும் அதை பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து கூறி காப்புரிமை கோரி வருகிறார். இந்நிலையில் கடந்த 1976ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை இந்த காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் இசையும் மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் என்று சரிகம நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது இளையராஜா இந்த பாடல்களை தனது சொந்த பாடல்கள் என்று கூறி அமேசான் மியூசிக் ஐடியூன்ஸ் மற்றும் ஜியோ சாங்க் போன்ற டிஜிட்டல் ஸ்ட்ரீம் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என்று வாதம் செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதி துஷார் ராவ் கெடேலா அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
அவரது தீர்ப்பில், சரிகம நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டு 134 படங்களின் பாடல்களை பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார். இந்த தடையை விதிக்கவில்லை என்றால் சரிகம நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்றும் நீதிபதி தெரிவித்திருக்கிறார். இந்த அதிரடி தீர்ப்பு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பயங்கர பின்னடைவை தந்துள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…