டெல்லி பாஜகவின் மாஸ்டர் பிளான்?… விஜய்யை தட்டி தூக்க இபிஎஸ் போடும் ஸ்கெட்ச்… இதுதான் விஷயமா…?

By Nanthini on ஆவணி 31, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி வாகை சூடும் வரலாறு திரும்புகிறது வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாம் மாநில மாநாடு மதுரையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாஜகவை விஜய் கடுமையாக விமர்சித்தார். மேலும் விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே மாநாட்டில் விஜய் அதிமுகவை சாடியும், இபிஎஸ் பெரிய அளவில் அதற்கு பதிலடி கொடுக்கவில்லை. இதற்கு கூட்டணியில் விஜயை இணைப்பது எங்கள் பொறுப்பு எனவும் அதனால் அவரை விமர்சிக்க வேண்டாம் என்றும் டெல்லியின் புள்ளிகள் போட்ட கண்டிஷன் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே நடந்த பேச்சு வார்த்தைகளில் பாதிக்கு பாதி தொகுதிகளை தமிழக வெற்றி கழகம் கட்சி கேட்டதாக சொல்லப்பட்டது. இதனால் மீண்டும் என்ன நடக்குமோ என இபிஎஸ் திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.