குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வருகிற பிப்ரவரி மாதத்ததில் ஏகே 64 படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று கூறியிருக்கிறார். ஆனால் இன்னமும் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இன்னும் இந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதே முடிவாகவில்லை. நடிகர் விஜய் இப்போது அரசியலுக்கு போய்விட்டதால், நடிகர் அஜீத்குமாருக்கு இனி சினிமாவில் போட்டியில்லை.
அத்துடன் அஜீத்குமார் நடிக்கும் படங்களுக்கு இப்போது பெரிய அளவில் ரசிகர்களிடம் ஆர்வமும் இல்லை. அவரது ரசிகர்கள் மட்டுமே அஜீத்குமார் படங்களை விரும்புகின்றனர். அதனால் அவரை வைத்து 300 கோடி ரூபாய் என்கிற அளவுக்கு பெரிய பட்ஜெட் படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் அவரது ஏகே 64 படத்தை துவங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.
மேலும் நடிகர் அஜீத்குமார் ஒரு படத்தில் நடிக்க 185 கோடி ரூபாய் சம்பளமாக கேட்கிறார். இவ்வளவு பெரிய சம்பளத்தை கொடுத்து அஜீத்குமாரை வைத்து படம் எடுத்தால் போட்ட முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது என்பதே தயாரிப்பாளர்களின் தயக்கமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் வருகிற 2026ம் ஆண்டில் அஜீத்குமாரின் 64வது படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டாலும் 2026 ஆண்டு இறுதிக்குள் அந்த படம் ரிலீஸ் ஆகுமா என்பது சந்தேகம்தான். அவரது சம்பளத்தை குறைத்தால் ஒரு வேளை படப்பிடிப்பை துவங்க வாய்ப்புள்ளது.
