திருமணமாகி 6 வருடங்களுக்குப் பிறகு தாயானார் நடிகை தீபிகா படுகோனே.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல பாலிவுட் தம்பதி..!

By Nanthini on புரட்டாதி 8, 2024

Spread the love

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை தீபிகா படுகோனே. இவர் தமிழிலும் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் பிசியாக நடித்து வரும் இவர் ஷாருக்கான், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

இவர்களுடைய திருமணம் இத்தாலியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தீபிகா பிசியாக நடித்து வந்ததால் இந்த ஜோடி கடந்த ஆறு ஆண்டுகளாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தன் மனைவி தீபிகா கர்ப்பமாக இருக்கும் தகவலை ரன்வீர் சிங் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

   

 

பிறகு நிறைமாத வயிற்றோடு போட்டோ சூட் நடத்தி அது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தனர். இந்த நிலையில் தீபிகா மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகாவுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.