“ஆன்லைன் இன்டர்வியூவில் சிக்கிய ‘டீப்ஃபேக்’ நபர்…” முகம் மாற்றும் டெக்னாலஜியால் திடுக்கிட்ட ரெக்ரூட்டர்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வைரல் செய்தி…!!

By Devi Ramu on ஐப்பசி 18, 2026

Spread the love

வேலைவாய்ப்புக்கான ஆன்லைன் நேர்காணலின் போது நபர் ஒருவர் நிகழ்நேர முகம் மாற்றும் ‘டீப்ஃபேக்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்கு ஆட்கொள்ளும் ரெக்ரூட்டர் ஒருவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்த அனுபவத்தின்படி, நேர்காணலின் போது ஒரு வேட்பாளரின் கண்ணாடி ஓரத்தில் இரட்டைப் படிவம் போன்ற முகம் தெரிந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த ரெக்ரூட்டர், கையை முகத்திற்கு நேராக வைக்குமாறு கூறியுள்ளார்; ஆனால் அந்த நபர் வேண்டுமென்றே முகத்திற்குப் பக்கத்தில் கையை வைத்து அதனைத் தவிர்த்துள்ளார். ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக்காலத்தில் ஆன்லைன் நேர்காணல்கள் எந்தளவிற்கு ஆபத்தானதாக மாறிவருகின்றன என்பதை இச்சம்பவம் காட்டுவதாகக் கூறி பலரும் விவாதித்து வருகின்றனர்.