“தங்கத்தின் விலை அதலபாதாளத்தில்!” ஒரே நாளில் ரூ. 15,000-க்கு மேல் சரிவு… நகை வாங்குவோருக்கு ஜாக்பாட்.!!

By Soundarya on பங்குனி 19, 2026

Spread the love

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 165 டாலர்கள் (ரூ. 15,396) வரை சரிந்து, 4,725 டாலராக வர்த்தகமாகிறது. இதேபோல் வெள்ளி விலையும் அவுன்ஸ் ஒன்றுக்கு 7 டாலர்கள் குறைந்து 71 டாலராக விற்பனையாகி வருகிறது. உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்த அதிரடி விலை சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையின் இந்த எதிரொலி இந்திய ஆபரணத் தங்கச் சந்தையிலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், மாலை நேர வர்த்தகத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் விலை குறையும் என நகை வியாபாரிகள் கணித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதும், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைப்பதும் இந்தச் சரிவுக்குப் பின்னணியில் உள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

   

இந்தியாவில் திருமண சீசன் மற்றும் பண்டிகைக் காலங்கள் நெருங்கி வரும் வேளையில், தங்கத்தின் இந்த விலை வீழ்ச்சி சாமானிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை தற்போது கணிசமாகக் குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பங்குச்சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த விலை சரிவு தற்காலிகமானதா அல்லது இன்னும் நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.