சென்னை அருகே கடன் தொல்லையால் மனைவி மற்றும் இரண்டு மகன்களை அடித்துக் கொலை செய்துவிட்டு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வரும் சிரஞ்சீவி (56) என்பவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். தொழிலதிபரான இவர் எலக்ட்ரானிக் கடை நடத்திவரும் நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று இரவு மனைவி மற்றும் இரண்டு மகன்களை அடித்து கொலை செய்துள்ளார்.
பிறகு கடன் தொல்லையால் அவரும் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நான்கு பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
