“நீ தாண்டா திருடிருப்ப”… வெறும் 300 ரூபாய் பணத்துக்காக 10 ஆம் வகுப்பு மாணவனை அரை நிர்வாணமாக்கி செய்த கொடூரம்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 18, 2025

Spread the love

வேலூர் மாவட்டம் அரும்பருத்தி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் மற்றும் சசிகலா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்ட நிலையில் தன்னுடைய இரண்டு மகன்களுடன் சசிகலா தனியாக வசித்து வருகிறார். தனியார் ஷூ நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து பிள்ளைகளை வளர்த்து வருகின்றார். மூத்த மகனான சந்தோஷ் (15) அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இதனிடையே சந்தோஷ் பங்க் கடை ஒன்றில் பொருள்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது 300 ரூபாய் காணவில்லை என்று கூறிய கடை உரிமையாளர் கிருஷ்ணவேணி மற்றும் அவரது உறவினர்கள் மாணவனை அழைத்து கடையில் அரை நிர்வாணமாக்கி திருடனை போன்று நடத்தி போலீசில் ஒப்படைத்து விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் சோக முடிவை எடுத்துள்ளான். வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்காததை கவனித்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

   

அங்கு மாணவன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே போலீசில் தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கடை உரிமையாளர் மற்றும் உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது