“பறிபோன எதிர்காலம்!”… புதிய கனவுகளோடு புறப்பட்ட இளம்பெண்… உயிரைக் குடித்த அசுர வேகப் பேருந்து… நடுநடுங்க வைத்த கோர விபத்து…!!

By Gayathri on ஐப்பசி 1, 2026

Spread the love

அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 22 வயது இளம் பெண் ஹ்ரிஷிதா லஹோன், டெல்லியில் உள்ள மைத்ரேயி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்று வந்துள்ளார். புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், தனது சொந்த ஊரை விட்டு டெல்லிக்கு வந்த புதிதில் பல சவால்களை எதிர்கொண்டாலும், நண்பர்களின் உறுதுணையோடு புதிய சூழலுக்குப் பழகி தனக்கென ஓர் எதிர்காலத்தை கட்டமைக்கும் கனவுடன் வாழ்ந்து வந்தார். ரிஷிதா, ஆயுஷி போன்ற நெருங்கிய தோழிகளுடன் ஆழமான நட்பைப் பேணி வந்த அவர், மற்றவர்கள் தனிமையாக உணரும்போது அவர்களுக்கு ஆறுதலாகவும் துணையாகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், செப்டம்பர் 28ஆம் தேதி காலை டெல்லி ஆசிரமம் மேம்பாலப் பகுதியில் வாடகை இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்து மோதி கோர விபத்து நிகழ்ந்தது. படுகாயமடைந்த ஹ்ரிஷிதா முதலில் ஜீவன் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், சிகிச்சை பலனின்றி அன்று மதியமே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

   

இந்த விபத்து குறித்து காவல் துறையினருக்கு உடனடியாகத் தகவல் கிடைக்காத நிலையில், மருத்துவமனை அறிக்கை மூலமாகவே வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை விபத்தை நேரில் பார்த்த சாட்சிகளோ அல்லது மோதிவிட்டுச் சென்ற பேருந்தோ அடையாளம் காணப்படவில்லை. அக்டோபர் 2ஆம் தேதி தோழிகளுடன் இரவு உணவருந்த திட்டமிட்டிருந்த நிலையில், எதிர்பாராத இந்த விபத்து ஹ்ரிஷிதாவின் உயிரையும் கனவுகளையும் பறித்து, அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பெருந்துயரை ஏற்படுத்தியுள்ளது.