டாக்டராக வேண்டும் என்ற பெரும் கனவோடு இருந்த ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கை, முறையற்ற கருக்கலைப்பு மாத்திரையால் பரிதாபமாகப் பறிபோயுள்ளது. நர்சிங் படித்து வந்த ஒரு மாணவனும் மாணவியும் காதலித்து வந்த நிலையில், அந்தப் பெண் கர்ப்பமடைந்துள்ளார். மூன்று மாத கர்ப்பமாக இருந்த நிலையில், மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் அந்த மாணவன் யூடியூப் வீடியோவைப் பார்த்துத் தனது காதலிக்குக் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.
மருத்துவர்களின் முறையான ஆலோசனையின்றி அந்த மாத்திரைகளை உட்கொண்டதால், அந்தப் பெண்ணுக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு, இறுதியில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு மருத்துவராக உருவெடுத்துப் பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பெண், தன் காதலனின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளை இழந்து தவிக்கும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தற்போது கதறி அழுது வருவது பார்ப்போரைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
