#image_title
டிடி ரிட்டன்ஸ் 2 திரைப்படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சந்தானம். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வந்தார். இவரும் தமிழ் சினிமாவில் இருந்த பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து காமெடியில் கலக்கி இருக்கின்றார்.
அதிலும் இவர் நடிகர் ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், விஷால் ஆகியோருடன் சேர்ந்து நடிக்கும் படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக நகைச்சுவை செய்யக்கூடிய ஒரு நடிகர். அதிக அளவில் ஆர்யாவுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
மேலும் கண்ணால் லட்டு திங்க ஆசையா என்ற திரைப்படத்தில் நடித்ததை தொடங்கி இனி நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று கூறிய சந்தானம் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். இருப்பினும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது .உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 40 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது.
தில்லுக்குதுட்டு என்ற திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக தான் டிடி ரிட்டன்ஸ் வெளியானது. தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் அதாவது டிடி ரிட்டன்ஸ் 2 திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்த திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்க இருப்பதாகவும், இப்படத்தை நடிகர் ஆர்யா தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க இருக்கின்றார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…