ஐயோ… கண்ணுல மிளகாய்ப் பொடியைத் தூவி… 4.5 லட்சம் சுருட்டிய கில்லாடி… SBI வங்கியில் பகல் கொள்ளை… 30 நிமிடத்தில் தூக்கிய மாஸ் போலீஸ்… மகாராஷ்டிராவில் பரபரப்பு…!

By Swetha on புரட்டாதி 12, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சூராஜ் போஜராஜ் போர்க்கர் (28) என்ற வாலிபர், முகமூடி அணிந்து வாடிக்கையாளர் போல எஸ்பிஐ வங்கி கிளைக்குள் புகுந்தார். திட்டமிட்டபடி, திடீரென தான் கொண்டு வந்திருந்த மிளகாய்ப் பொடியை அங்கு பணியில் இருந்த வங்கி ஊழியர்களின் கண்களில் தூவினார். இதனால் ஊழியர்களுக்குக் கண் எரிச்சல் ஏற்பட்டு நிலைதடுமாறிய சூழலைப் பயன்படுத்தி, அங்கிருந்த சுமார் ரூ 4.53 லட்சம் பணத்தைச் சுருட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்தத் திடீர் தாக்குதலால் வங்கியில் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. எனினும், வங்கி அதிகாரிகள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இச்சம்பவத்தின் முழு காட்சிகளும் வங்கியின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. இக்காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி வேகமாகப் பரவின.

   

தகவல் அறிந்த நாக்பூர் சக்கர்தாரா பகுதி காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு சிசிடிவி காட்சிகளையும், அவர் தப்பிச் சென்ற வழியையும் ஆய்வு செய்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கொள்ளை நடந்த 30 நிமிடங்களிலேயே குற்றவாளியைப் பிடித்த காவல்துறையினர், அவரிடமிருந்த ரூ 4.53 லட்சம் முழுப் பணத்தையும் பத்திரமாக மீட்டனர்.