Categories: சினிமா

விஷாலின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் 3-ஆம் நாள் வசூல்… ரீ-ரிலீசான ‘கில்லி’ படத்தின் வசூலில் 3ல் 1 பங்கை கூட தொடலையே…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்ததும் குறிப்பிடத்தக்கது.  தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்தது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, யோகிபாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

படம் ரிலீசாவதற்கு முன்பு விஷால் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை திரையரங்குகள் மீது வைத்தார். படம் பார்த்த ரசிகர்கள் பலர் பாசிட்டிவ் விமர்சனங்களையும், ஒரு சிலர் நெகட்டிவ் விமர்சனங்களையும் இணையத்தில் பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், ஏப்ரல் 26 ஆம் தேதியன்று ரிலீசான ரத்னம் திரைப்படம் முதல் நாளில் ரூ. 3 கோடி வரை வசூல் செய்திருந்தது.

இதைத்தொடர்ந்து சனிக்கிழமை 60 இலிருந்து 70 லட்சம் வரையில்தான் வசூல் செய்தது. மேலும் 3 வது நாளான ஞாயிற்றுக்கிழமை வெறும் 2 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. ரத்னம் திரைப்படத்தின் வசூலோடு ஒப்பிடும் போது ரீ ரிலீசான ‘கில்லி’ திரைப்படத்தின் வசூல் எவ்வளவோ பரவாயில்லை என்று கூறலாம். அதாவது கில்லி திரைப்படம் இதுவரை 12 கோடி முதல் 15 கோடி வரை கலெக்ட் செய்துள்ளதாம். தற்பொழுது ரசிகர்கள் கில்லி படத்தின் 3 ல் 1 பங்கு வசூலை கூட ரத்னம் திரைப்படம் எட்டவில்லையே என்று கலாய்த்து வருகின்றனர்.

Begam

Recent Posts

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

6 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

11 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

17 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

20 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

24 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

28 minutes ago