காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்… தவெகவில் இணைந்த முக்கிய புள்ளி… செம குஷியில் ஸ்டாலின்….!

By Nanthini on சித்திரை 11, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை தி.நகர் தொகுதியில் நிலவும் அரசியல் திருப்பங்கள் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ-வான கருணாநிதிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர் தனது கட்சிப் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இந்தச் சூழலில், திமுகவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அவரது மகள், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தனது தந்தைக்கே சீட் கிடைக்காத அதிருப்தியில் இந்த முடிவை எடுத்த அவர், ஒருபடி மேலே சென்று தி.நகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்காகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதுடன், திமுக தொண்டர்களிடமே தவெக-வுக்கு ஆதரவு கோரி வருவது ஆளுங்கட்சித் தரப்பை நிலைகுலையச் செய்துள்ளது.