உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் பிரீதி என்பவர், பணிச்சுமை மற்றும் அதிகாரிகளின் கடும் நெருக்கடி காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயின் மரணத்திற்கு அதிகாரிகளே காரணம் என்று அவரது மகள் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “அம்மாவுக்கு அவ்வளவு மன உளைச்சலைக் கொடுத்தார்கள், அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல் இன்று என் அம்மா என்னுடன் இல்லை” என்று அவர் கண்ணீருடன் தெரிவிக்கும் காட்சிகள் காண்போரின் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
” मम्मी को इतनी टेंशन दी, इतनी टेंशन दी की, आज मेरी माँ नहीं रही”
युवती को इस तरह रोते देख कलेजा पसीज जा रहा है. ये प्रीति आंगनबाड़ी की बेटी है, जिसका आरोप है कि प्रीति के अधिकारियों ने उनपर इस कदर दबाव बनाया कि उनकी मौत हो गई.
युवती का कहना है कि “छोटी सी आंगनबाड़ी की नौकरी… pic.twitter.com/7GcGDBbQbt
— Priya singh (@priyarajputlive) April 2, 2026
ஒரு சிறிய அங்கன்வாடி வேலையில் இருந்த தனது தாயை, மேலதிகாரிகள் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக அந்த இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார். அதிகாரிகளின் தேவையற்ற நெருக்கடியும், பணி அழுத்தமுமே ஒரு உயிரைப் பறிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உழைக்கும் பெண்களுக்குப் பணி இடத்தில் நிலவும் மன அழுத்தமும், அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகமும் எந்த அளவிற்கு ஒரு குடும்பத்தைப் பாதிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
