வளர்ப்பு தாய்க்கு எமனாக மாறிய மகள்… “தாயின் மார்பு மேல் ஏறி” 2 காதலர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் மகள் செய்த கொடூரம்…நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்..!

By Soundarya on சித்திரை 3, 2026

Spread the love

உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருத்தி, தனது இரண்டு காதலர்களுடன் இணைந்து வளர்ப்புத் தாயைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எட்டாம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமிக்கு 20 மற்றும் 21 வயதில் இரண்டு காதலர்கள் இருந்துள்ளனர். இவர்களது காதலுக்கு வளர்ப்புத் தாய் தடையாக இருந்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட அந்தச் சிறுமி ஒரு பயங்கரத் திட்டத்தைத் தீட்டியுள்ளாள்.

நள்ளிரவில் தாய் தூங்கிக்கொண்டிருந்தபோது, அந்தச் சிறுமி தாயின் மார்பின் மீது ஏறி அமர்ந்து கொண்டு, தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்துள்ளார். அவருக்கு உதவியாக அங்கிருந்த இரண்டு காதலர்களும் தாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அனாதையாக இருந்த அந்தச் சிறுமியை எடுத்து வளர்த்து, ஆளாக்கிய அந்தத் தாயையே, தனது காதலுக்கு இடையூறாக இருந்த ஒரே காரணத்திற்காக அந்தச் சிறுமி காதலர்களுடன் சேர்ந்து கொன்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்துள்ளனர்.