“மாமியார் இறந்தால்தான் சந்தோஷமாக வாழ முடியும்…” கழிவறையில் வழுக்கி விழுந்ததாக நாடகம்…. 5 ஆண்டு கால பகையை தீர்த்த மருமகள்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2026

Spread the love

செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இந்துஜா (28). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், வெங்கடேசனின் தாய் பெருந்தேவியுடன் (61) ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கணவன்-மனைவி இடையேயான சண்டைகளுக்கும் மாமியாரே காரணம் எனக் கூறி இந்துஜா ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று பெருந்தேவி கழிவறையில் எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்துஜா, அவரது கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் மாமியார் தவறி விழுந்து மூச்சுத்திணறி மயங்கிவிட்டதாக நாடகமாடிச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

   

அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். உடற்கூறாய்வு அறிக்கையில் பெருந்தேவியின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமானது. காவல்துறையினரின் தீவிர விசாரணையில், “அவர் இறந்தால்தான் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதால் கொலை செய்தேன்” என இந்துஜா பகிரங்கமாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.