அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்… காதலனுக்காக தாயை சேர்ந்து அடித்து கொன்ற மகள்… குண்டூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 12, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பொன்னூர் பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஈவூரு லட்சுமி என்பவர் இன்று அதிகாலை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சுமியின் மகள் புஷ்பலதா மற்றும் அவரது காதலன் ராஜாதான் இந்த கொலையைச் செய்ததாக உறவினர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். புஷ்பலதாவின் முதல் கணவர் உயிரிழந்த நிலையில், அவரை இரண்டாவதாகத் திருமணம் செய்த கணவரும் கைவிட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இதன் பின்னர் விஜயவாடாவைச் சேர்ந்த ராஜா என்பவருடன் புஷ்பலதாவுக்குக் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

   

இவர்களது சட்டவிரோதக் காதல் உறவுக்குத் தாய் லட்சுமி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து தடையாக இருந்து வந்துள்ளார். தாயின் இந்த எதிர்ப்பே அவர் கொல்லப்பட்டதற்குக் காரணம் என்றும், காதலனுடன் சேர்வதற்காகவே புஷ்பலதா தனது தாயைக் கொலை செய்துள்ளதாகவும் லட்சுமியின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.