சின்னத்திரையில் அறிமுகமாகிப் பின்னர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிப் புகைப்படங்கள் மூலம் புகழ்பெற்ற நடிகை தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் ‘Exclusive Subscriber’ வசதியைப் பயன்படுத்தி மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்த இவர், தற்போது தனது பெயரிலேயே சொந்தமாக ஒரு செயலியைத் தொடங்கி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
அந்தச் செயலியில் பிறந்தநாள் வாழ்த்து தொடர்பான வீடியோ காலில் பேச ₹6000, பிராண்ட் விளம்பரங்களுக்கு ₹50,000 மற்றும் சந்தா கட்டணமாக ₹1000 எனப் பிரத்யேக ரேட் கார்டை அவர் வெளியிட்டுள்ளார். பணத்திற்காக இப்படியா இறங்குவது என இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வறுத்தெடுத்து வரும் நிலையிலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தர்ஷா குப்தா தனது புதிய தொழிலை நடத்தி வருகிறார்.
