“தவெக-வை அழிக்க இவரே போதும்”…. ‘கொட்டும் தேள்’ ஆக காத்திருக்கும் ஆதவ் அர்ஜுனா…. விஜய்க்கு வரும் மிகப்பெரிய ஆபத்து…?

By Nanthini on ஆடி 19, 2026

Spread the love

தவெக தலைவர் விஜய்க்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அதற்கு ஆதவ் அர்ஜுனா தான் காரணமாக இருப்பார் என்று திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார். கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆதவ் அர்ஜுனாவை ‘கொட்டும் தேள்’ என்று வர்ணித்ததுடன், திமுகவில் எம்பி சீட் கிடைக்காத விரக்தியால்தான் அவர் விசிகவிற்குச் சென்றார் என்றும், தற்போது தவெகவில் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் சாடினார்.

மேலும், தவெகவை முற்றிலும் அழிப்பதற்கு ஆதவ் அர்ஜுனா ஒருவரே போதும் என்று குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, அப்படிப்பட்ட கொட்டும் தேள்களை எதிர்கொண்டு வெட்டும் பேராற்றல் திமுகவிற்கு எப்போதும் உண்டு என்றும் தங்களது அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் எச்சரித்துள்ளார்.