உங்களுக்கு பொடுகு தொல்லை ரொம்ப அதிகமா இருக்கா?… இதோ இந்த 4 பொருள் மட்டும் யூஸ் பண்ணுங்க போதும்…!

By Nanthini on மார்கழி 23, 2025

Spread the love

பொதுமக்கள் பலரும் கோடை காலத்தில் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது பொடுகு தொல்லை தான். இந்த பொடுகு தொல்லையில் இருந்து விடுபட வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி தீர்வு காணலாம். பொடுகு தொல்லையை கவனிக்காமல் விட்டால் முடி உதிர்வு, தோல் வியாதி மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படும். முகத்தில் பருக்கள் உருவாகலாம். கழுத்து மற்றும் காதில் பின்புறத்திலும் தோல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். வரண்ட சருமம் போன்ற பல பிரச்சனைகளும் ஏற்படும்.

இதிலிருந்து விடுபட எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டிலும் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை தலைமுடியில் மசாஜ் செய்வது போல தேய்த்து 20 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு ஷாம்பு தேய்த்து தலையை அலச வேண்டும். தேங்காய் எண்ணெய் முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சை சாறு பொடுகு தொல்லையை நீக்கி முடி வளர்ச்சிக்கு உதவும்.

   

அடுத்ததாக கைப்பிடி வேப்பிலைகளை நன்றாக கொதிக்க வைத்து இரவு முழுவதும் அந்த தண்ணீரை அப்படியே வைக்க வேண்டும். பிறகு காலையில் குளிக்கும் போது அந்த தண்ணீரை கொண்டு தலை குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்..

   

அடுத்து தேவையான அளவு வால் மிளகு பொடி மற்றும் பால் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை அப்படியே தலை முழுவதும் நன்றாக தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து பிறகு தலைக்கு குளிக்க வேண்டும்.

 

முளைகட்டிய வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு தயிர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்கு குளிக்க வேண்டும். இது உடல் உஷ்ணத்தை குறைக்கும் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

சின்ன வெங்காயம் அரைத்து அதில் இருந்து சாறு எடுத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் அல்லது எண்ணெய் சேர்த்து தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு தலைக்கு குளித்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.