90களில் தமிழ் சினிமாவை நடன திறமையின் மூலம் கவர்ந்தவர் டான்ஸ் மாஸ்டர் ராம்ஜி, இவர் ஆடிய பல பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் பரவி வைரலானது. இவர் ஸ்டெப் போடும் விதத்திற்கே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.

தமிழ் சினிமா துறையில் நடனமாடுவது மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் சில திரைப்படங்களுக்கு கதாநாயகனாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர் சினிமா துறையில் வாய்ப்புக்கள் குறைவானதால் சின்னத்திரையில் இறங்கினர்.

சினிமா துறையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் களவுதேசம், பொண்டாட்டி தேவை, மர்மதேசம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தற்போது டான்ஸ் மாஸ்டர் ராம்ஜி ஆடை வடிவமைப்பாளர் அமிர்தா ராமை திருமணம் செய்து கொண்டார்.
இவர் பிக் பாஸ், இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் போன்ற படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் புகைப்படம் ரசிகர்களால் சமூக வைத்தலங்களில் பரவி வைரலாகி வருகிறது.

