தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் இறுதியாக 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக மாறியது. அதனைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் கமிட்டான அஜித் அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் படம் இன்னும் சென்சார் செய்யப்படவில்லை. அதனால் படத்தின் ரிலீஸ் தேதியை பட குழு தள்ளி வைத்துள்ளது. அதேசமயம் புத்தாண்டு ஸ்பெஷலாக படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அஜித் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து அஜித் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டு தனது குழுவுடன் சேர்ந்து வெற்றி பெற்று இந்திய கொடியை பறக்க விட்டார். ஜூன் மாதத்திற்கு பிறகு தான் படப்பிடிப்பில் ஈடுபட உள்ளதாகவும் அதுவரை கார் ரேஸில் இருப்பேன் எனவும் சமீபத்தில் அஜித் தெரிவித்திருந்தார். சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் தனக்கு பிடித்த விஷயங்களை நேரம் ஒதுக்கி செய்பவர்தான் அஜித். இப்படியான நிலையில் நடிகர் அஜித் குறித்து கல்யாண் மாஸ்டர் பேசியுள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அஜித் பண்ணத என்னைக்கும் என்னால மறக்கவே முடியாது.

எங்க அம்மா இறக்கும்போது எங்க கூடவே வந்து அஜித் உக்காந்துட்டாரு. ஹாஸ்பிடலில் நாங்கள் எல்லோரும் இருக்கும் போது அம்மாவோட பாடி என்னோட கார்ல தான் வரணும் என்று சொல்லிட்டு அங்கேயே இருந்துட்டாரு. எங்க அம்மா பாடிய தூக்கிட்டு வந்து வீடு வரைக்கும் வச்சி எல்லாமே அவர்தான் பண்ணாரு. நான் அவர்கிட்ட எவ்வளவோ சொல்லி பார்த்தேன், அதிகமா கூட்டம் சேர்ந்துரும் உனக்கு தான் டென்ஷன் வரும் நீ இங்கிருந்து கிளம்பிரு என்று அவர் கிட்ட நான் சொன்ன. உடனே அவரு நானும் உங்க கூட பொறந்தவன் மாதிரி தான் என்று சொன்னாரு. அதெல்லாம் ஓகே தான் இங்க ரொம்ப கூட்டம் கூடிடும் சமாளிக்க முடியாது என்று சொல்லிய பிறகு தான் சரி நான் கிளம்புறேன் கல்யாண் என்று சொல்லிட்டு கிளம்புனாரு. அஜித் உண்மையிலேயே ஒரு நல்ல மனுஷன் என்று கல்யாண் மாஸ்டர் புகழ்ந்து பேசி உள்ளார்.
