கைதவறி கீழே விழும் பொருட்கள்… குடும்பத்துக்கு தீமை தருமா? இந்து சாஸ்திரப்படி நல்லதா… கெட்டதா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

By Elango on மார்கழி 21, 2025

Spread the love

சில பொருட்களை எடுக்கும் போது அல்லது பிறரிடம் கொடுக்கும்போதோ கைதவறி கீழே விழுந்து விடுகிறது அல்லது கொட்டி விடுகிறது. இது நல்லதா கெட்டதா அபசகுணமா என்பது குறித்து இந்து சாஸ்திரப்படி இப்போது தெரிந்துக்கொள்ளலாம்.

குங்குமம் கீழே கொட்டினால் அது அபசகுணம் என்கின்றனர். ஆனால் இந்து சாஸ்திரப்படி குங்குமம் கை தவறி கீழே கொட்டினால் வெற்றி மற்றும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பதற்கான அறிகுறி ஆகும்.

   

அரிசி கை தவறி கீழே கொட்டினால் குடும்பத்தில் சண்டை சச்சரவு காரியத்தடை ஏற்படும் என்று அர்த்தம். தொழில் தொடங்கினால் தடை குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும் என்றும் அர்த்தம்.

   

மஞ்சள் கீழே கொட்டினால் அது மங்களம் என்று அர்த்தம். ஏதேனும் தொழில் தொடங்க போகிறீர்கள் என்றால் அது சிறப்பாக நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

 

எண்ணெய் கை தவறி கீழே கொட்டினால் இழப்பு துக்ககரமான செய்திகள் தேடி வரும் என்று அர்த்தம். தொழிலில் நெருக்கடி, தடை மற்றவர்கள் உங்களை குறை சொல்வது போன்ற விஷயங்கள் நடக்கும்.

பால் காய்ச்சும் போது கொட்டினால், பாலை பூனை தட்டி விட்டால் இது கலகம் தோல்வி ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

சர்க்கரை கீழே கொட்டுவதற்கு நல்ல பலன்களே சொல்லப்படுகிறது. சர்க்கரை கீழே தரையில் சிந்துவதால் புகழ் ஏற்படும். நாம் செய்யும் தொழிலில் மேன்மை ஏற்படும் என்பதே அதற்கு அர்த்தம்.

தேங்காய் கைதவறி கீழே விழுந்தால் தொழில் செய்பவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். தடைகள் அனைத்தும் நீங்கும்.

பூக்கள் கைதவறி கீழே கொட்டினால் காரிய வெற்றி பக்தி நன்மை உண்டாகும்.

உப்பு கீழே சிந்துவது குடும்பத்திற்கு நல்லதல்ல. உப்பு மகாலட்சுமி அம்சமாக கருதப்படுகிறது. குடும்பத்தில் விரும்பத்தகாத பலன்கள், பணத்தடை ஆகியவை ஏற்படலாம்.

தண்ணீர் கை தவறி சிந்துவது கடன் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

விளக்கு கீழே தவறி விழுவது ஆபத்தான அறிகுறியாகும். தீய சக்திகள் நம்மை சுற்றி இருப்பதை குறிப்பதாகும் என்று இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.