தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கே. அண்ணாமலை மீது அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் டெய்சி சரண் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னையில் ஜூன் 09 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அண்ணாமலை தன்னை ஒரு தனி அறைக்கு அழைத்து, கதவை மூடி, ‘பிளடி’ போன்ற அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி தன்னை கட்சியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு மிரட்டியதாகத் தெரிவித்தார். பெண்ணான தனக்கு அண்ணாமலை கொடுத்த மன உளைச்சல்களும் அச்சுறுத்தல்களும் தாங்க முடியாதவை என்று அவர் செய்தியாளர்கள் மத்தியில் வேதனையுடன் குறிப்பிட்டார்.
மேலும், அண்ணாமலை தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்த காலத்தில், திருச்சி சூர்யா தன்னை மிகவும் ஆபாசமாகவும் மோசமாகவும் தொலைபேசியில் திட்டினார் என்று டெய்சி சரண் கூறினார். இதுகுறித்து அண்ணாமலையிடம் புகார் அளித்தும், அவர் திருச்சி சூர்யா மீது எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல், மாறாக அவரைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார் என்று குற்றம்சாட்டினார். அண்ணாமலைக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களுக்கு மட்டுமே கட்சியில் முக்கியத்துவம் தரப்பட்டதாகவும், நியாயமாகக் கேள்வி கேட்பவர்கள் ஒடுக்கப்பட்டதாகவும் அவர் சாடினார்.
அரசியல் ரீதியான புகார்கள் மட்டுமன்றி, அண்ணாமலை மீது பெரும் நிதி மோசடி குற்றச்சாட்டையும் டெய்சி சரண் சுமத்தியுள்ளார். அண்ணாமலை பல்வேறு தொழிலதிபர்களை மிரட்டியும், முறைகேடான வழிகளிலும் கோடிக்கணக்கில் பணம் பெற்று, லண்டனில் சொத்துக்களை வாங்கியிருப்பதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார். தமிழக பாஜகவுக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களையும், அண்ணாமலையின் செயல்பாடுகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் அமைந்துள்ள டெய்சி சரணின் இந்த அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…
திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…
சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…
மதுரை முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளருமான பி.எம். மன்னன், தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30…
மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…