தினம்தோறும் வெள்ளை சாதம் சாப்பிடுவதால் உடம்பில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். வெள்ளை சாதம் தென்னிந்திய மக்களின் பிரதான உணவாக இருக்கின்றது. அரிசி உணவை பெரும்பாலான மக்கள் தினமும் அதிக அளவு எடுத்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு மூன்று வேலையும் அரிசி சாதம் எடுத்துக் கொள்வதால் அடுத்தடுத்து நாம் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி யாரும் அறிவதில்லை.. பொதுவாகவே வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் இவை உடம்பில் கொழுப்பாக மாறிவிடுகின்றது.
இதனால் மூன்று வேளையும் சாதம் எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்கும். சாதம் சாப்பிடுவதால் அடிக்கடி பசி ஏற்படுவது உடன் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு பல மடங்கு அதிகம். அதேசமயம் நீரிழிவு நோயாளிகள் அரிசி சாதத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதால் இதில் உள்ள கிளைசெமிக் குறியீடு அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும். இதன் காரணமாக நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவே சாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளை சாதத்தில் சத்துக்கள் மிகவும் குறைவுதான். இதனை ஒரு நாளைக்கு மூன்று வேலை சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் வேகமாக அதிகரிக்கும்.
இதனால் இதய பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புும் அதிகம். இதற்கு பதிலாக சிவப்பு அரிசி சாதத்தை எடுத்துக் கொள்ளலாம். கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் வெள்ளை சாதத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் சாதம் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் இன்னும் அதிகமாகி ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். தினம்தோறும் வெள்ளை சாதத்தை சாப்பிடுவதால் வளர்ச்சிதை மாற்ற பிரச்சனை ஏற்படும். வளர்ச்சிதை மாற்றத்தை படிப்படியாக குறைக்க ஆரம்பித்ததும் இதனால் உடல் பருமன் மற்றும் செரிமான பிரச்சனை ஏற்படும். எனவே உடலில் ஏராளமான பிரச்சனைகளை உண்டு பண்ணும் வெள்ளை சாதத்தை சற்று குறைவாக எடுத்துக் கொள்வதே நல்லது.
