Connect with us

அந்தப் படத்தோட கிளைமாக்ஸ்.. விஜயகாந்தோட நண்பர் ராவுத்தர் தான் சொன்னாரு.. தயாரிப்பான சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

CINEMA

அந்தப் படத்தோட கிளைமாக்ஸ்.. விஜயகாந்தோட நண்பர் ராவுத்தர் தான் சொன்னாரு.. தயாரிப்பான சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

 

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தின் கடைசி கிளைமாக்ஸ் உருவான விதம் குறித்து ப்ரொடியூசர் டி சிவா ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் டி சிவா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் விஜயகாந்த் குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். இவர் விஜயகாந்த் நடித்த பல படங்களை தயாரித்து இருக்கின்றார். சொல்வதெல்லாம் உண்மை, பூந்தோட்ட காவல்காரன், பாட்டுக்கு ஒரு தலைவன் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கும் சிவா விஜயகாந்த் குறித்தும் அவரது நண்பர் ராவுத்தர் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

   

நடிகர் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குனரான எஸ் ஜே சந்திரசேகர் இயக்கத்தில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் விஜயகாந்த். எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் இயக்குனர் செந்தில்நாதன். இவர் எடுத்த முதல் திரைப்படம் தான் பூந்தோட்ட காவல்காரன். செந்தில் நாதனுக்கும் விஜயகாந்துக்கும் நல்ல நட்பு இருந்தது.

இதனால் அவர் முதல் திரைப்படத்தில் நடிப்பதற்கு விஜயகாந்த் ஒப்புக்கொண்டார். அது மட்டும் இல்லாமல் செந்தில் நாதனை வைத்து படம் எடுத்தால் மட்டுமே நான் நடிப்பேன் என்று தன்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தார். அப்படி தொடங்கப்பட்டது தான் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படம் . இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராதிகா நடித்திருப்பார்.

விஜயகாந்த் மிகவும் நியாயமான மனிதர் இரவு எத்தனை மணி வரை விழித்திருந்தாலும் காலை 6 மணிக்கு உதவியாளர் எழுப்பினால் 7:00 மணிக்கு தயாராகி படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார். இந்த அர்ப்பணிப்புகாகவும், உழைப்புக்காகவும் தான் தன் வாழ்நாளில் அசைக்க முடியாத நடிகராக பலம் வந்தார். அவருடன் பயணித்த யாரும் அவர் அளவுக்கு முன்னேறவில்லை என்று தான் கூற வேண்டும்.

புதுமுக இயக்குனர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த் திரைத்துறையில் கேப்டன் என்ற அடைமொழியுடன் வலம் வந்தார். நடிகர் விஜயகாந்த்க்கும் இப்ராஹிம் ராவுத்தருக்கும் இடையேயான நட்பு என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த 11 படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை  கொடுத்தது. அந்த நேரத்தில் தான் விஜயகாந்துக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

11 படங்கள் தோல்வி படங்களாக அமைந்ததால் திருமணத்திற்கு முன்பு எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்று இப்ராஹிம் ராவுத்தர் பெருமளவு முயற்சி செய்து வந்தார். அந்த சமயத்தில் உருவான திரைப்படம் தான் பூந்தோட்ட காவல்காரன். இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்று ஒரு படம் வரைந்து காமித்து இப்படி தான் எடுக்க வேண்டும் என்று அவ்வளவு அழகாக எடுத்துக் கூறி படம் ஆக்கினார். அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் இன்றளவும் பேசும் படி இருக்கின்றது என்றால் அதற்கு ராவுத்தர் தான் காரணம் என தயாரிப்பாளர் டி சிவா கூறியிருக்கின்றார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top