திடீரென மயங்கி விழுந்த டி ராஜேந்தர்…  வெள்ள நிவாரண பொருட்கள் வழங்க சென்ற  போது நடந்த விபரீதம்.. வைரலாகும் வீடியோ…

By Begam on மார்கழி 31, 2023

Spread the love

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழையால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குமரிக் கடலில் உண்டான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழை மற்றும் இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவை தென் தமிழ்நாட்டில் பெருமழையை கொட்டித் தீர்த்தது.

   

ஒரு ஆண்டு முழுவதும் பெய்யக் கூடிய 95 செமீ மழை, ஒரே நாளில் காயல்பட்டினத்தில் கொட்டியது. இதனால் 4 மாவட்டங்களிலும் வெள்ளம் கரை புரண்டோடியது. அணைகள் நிரம்பியது, தாமிரபரணி நதியில் 1 லட்சம் கன அடி வெள்ள நீர் பாய்ந்தோடியது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல நூறு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து தனித்தனி தீவுகளாக தத்தளிக்கின்றன.

   

 

வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில பேரிடர் குழுக்களுடன் முப்படைகளும் களத்தில் இறங்கி தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.தமிழ்நாடு அரசு அமைச்சர்கள் படையை களமிறக்கி போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபலங்களும் தங்களால் இயன்ற உதவிகளை தூத்துக்குடி மக்களுக்கு செய்து வருகின்றனர்.

#image_title

அந்தவகையில் தற்பொழுது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்ட மக்களுக்கு நேற்று நடிகர் விஜய் தன்னால் முடிந்த உதவிகளை செய்தார் . அதேபோல நடிகர் சிம்புவின் தந்தையான நடிகர் டி ராஜேந்திரன் அவர்கள் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார். அப்பொழுது அவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Ssmusic (@ssmusicofficial)