தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் டி.இமான். இவர் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி மற்றும் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதனிடையே இசையமைப்பாளர் இமான் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் தனது மனைவியை இமான் விவாகரத்து செய்து விட்டார். அதுவும் விவாகரத்து செய்து ஓராண்டுக்கு பிறகு தான் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இமான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
பிரபல கலை இயக்குனர் உபாால்டுவின் மகள் எமிலி என்பவரை இமான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அவரை மறுமணம் செய்து முடித்துள்ளார். இவர்கள் இருவருமே திருமணத்திற்கு பிறகு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய டி.இமான் டிராப் ஆன படங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது ,”தமிழன் ரிலீஸ் ஆகி அதன் பிறகு மைனா என்ற படம் அமைவதற்கு கிட்டத்தட்ட எட்டு ஒன்பது வருடம் ஆனது. அதுக்கு முன்னாடி நிறைய படங்கள் பூஜை போட்டு பூஜை போட்டு டிராப்பாகி விட்டது. டிராப் ஆன படங்கள் மொத்தம் 22 இருக்கும். ஆரம்பத்தில் பூஜை போட்டு டிராப்பானது மட்டும் இல்லாமல் ஒவ்வொன்றுக்கும் பாட்டு கூட ரெக்கார்ட் செய்திருப்போம்.
சில படங்கள் முடிந்து ரீ ரெகார்டிங்கிற்கு நிதி இல்லாமல் நின்ற திரைப்படங்கள். இந்த மாதிரி நிறைய படங்கள் இருக்கிறது. மாட்டிக்கிட்டது என்றால் மாட்டிக்கிட்டது தான். அதை நான் வேறு எதற்கும் பயன்படுத்தவும் முடியாது. சார் நான் எதையாவது பண்ணி கொண்டு வந்து விடுவேன் என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால் அதற்கு வருஷக்கணக்காகி விடும. காலதாமதம் பண்ணினால் அந்த படம் காலாவதியாகிவிடும்” என்று எமோஷனலாக பேசி உள்ளார்.