அமெரிக்கா – ஈரான் மோதல் எதிரொலி..! 10 மாதங்களுக்குப் பிறகு எகிறிய சிலிண்டர் விலை… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

By Soundarya on பங்குனி 7, 2026

Spread the love

சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது 928.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு இல்லத்தரசிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வணிக ரீதியிலான சிலிண்டர் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் விலை 114.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, தற்போது 2,043.50 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய விலை மாற்றங்கள் மார்ச் 7-ஆம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

   

சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்களே இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ச் சூழல் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலை காரணமாக எரிவாயு விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.