வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது புயலாக உருவெடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும். அதன்பின், 27ஆம் தேதி புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு “Montha புயல்” என பெயரிடப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக 27ஆம் தேதி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
