BREAKING: ரெட் அலர்ட்… அதி கனமழை வெளுத்து வாங்கும்…. தமிழகத்திற்கு எச்சரிக்கை….!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

தமிழகத்தை டிட்வா புயல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் புயல் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.