க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு கர்ப்பமாக இருப்பதை அறிவித்த CWC போட்டியாளர்.. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்..

By Ranjith Kumar

Updated on:

விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சி என்றாலே அது குக் வித் கோமாளி தான். இதுவரையிலும் நான்கு சீசன்களை முடிந்த நிலையில் தற்போது வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் TRP ரேட்டை உடைத்த ஒரு ஷோ இருக்கிறது என்றால் அது குக் வித் கோமாளிக் மட்டுமே அந்த பெருமை சேரும், அந்த அளவிற்கு மக்கள் மனதை உலுக்கிய ஒரு நிகழ்ச்சி என்றே கூறலாம்.

இதில் நடத்தும் கோமாளிகளின் சம்பவங்களும், குக்குகளின் கலவரங்களும் மக்களை மிக ரசிக்க வைக்க கூடிய ஒரு விஷயமாகவே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசிகர்கள் மன நெகிழ்ந்து சந்தோஷப்பட்டோம் என்று பலரும் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நான்கு சீசன்களில் மிக எதிர்பார்ப்பை கிளப்பிய ஒரு சீசன் தான் 2வது ஆகும். இதில் கலந்து கொண்ட கோமாளிகளை டப் கொடுக்கும் அளவிற்கு குக்குகளும் செம்ம பன் செய்தார்கள். அதில் கோமாளியாக வந்த பாலா, புகழ், சிவாங்கி அவர்களையே கதிகலங்க வைத்து டஃப் கொடுத்து காமெடி செய்த குக்கான பாபா பாஸ்கர், தீபா, ஷகிலா, அஸ்வின் இவர்களை ஆகும்.

   

எல்லா சீசனிலும் கோமாளிகள் தான் நிகழ்ச்சியை எடுத்துச் செல்வார்கள், ஆனால் சீசன் 2-டில் இந்த குக்குகள் தான் தாங்கி பிடித்தார்கள் என்று கூறலாம். குறிப்பாக பாபா பாஸ்கர் தான் இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக எடுத்துச் சென்றார் என்று பலரும் இவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்கள். இந்த சீசன்னையில் தான் life card மூலம் என்ட்ரி ஆன பாக்கியலட்சுமி போன்ற பல சீரியல்களில் முன்னணி கதாநாயகியாக நடித்த பிரபலமான ரித்திகா தமிழ்ச்செல்வி அவர். இந்த சீசனில் இவரும் பாலாவும் இணைந்து கொடுக்கும் நகைச்சுவையான விஷயங்கள் பல கெமிஸ்ட்ரி ஒத்து போனது என்று பல ரசிகர்கள் ரசித்து வந்தார்கள்.

ரித்திகா அவர்கள் இந்த சீசனில் இருந்து வெளிவந்த பின் கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு என்ற தொழில் அதிபர் திருமணம் செய்து கொண்டார். ரித்திகா இல்லற வாழ்க்கையில் தீவிரமாக இருந்த நிலையில், தற்போது இவர் தான் கர்ப்பமாக இருப்பதை சோசியல் மீடியாவில் மூலம் தன் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு தன் ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார். இதை கண்ட குடும்பத்தாரும் சினிமா பட்டாளமும் மற்றும் ரசிகர்களும் பல பலரும் ஆதரவும் அன்பையும் தெரிவித்து வாழ்த்தி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)

author avatar
Ranjith Kumar