‘SK-க்கு தங்கச்சியா இல்ல.. ஹீரோயினாவே நீங்க நடிக்கலாம்’… டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோஷூட் நடத்திய CWC மோனிஷா… Beautiful ஸ்டில்ஸ்…

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள் எத்தனையோ வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

   

அந்த வகையில் மூன்று சீசன்களுக்கு மேல் கடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசனின் வெற்றிக்கு முக்கிய காரணமே இந்நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியின் டைட்டிலே வின்னராக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சீசனில் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில் மோனிஷாவும் ஒருவர்.

இவர் குக் வித் கோமாளி சீஸன் 4 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் . மணிமேகலைக்கு பின்னர் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு கோமாளியாக வளம் வந்தவர் மோனிஷா.

இவர் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மோனிஷா.

இவர் தற்பொழுது ஹீரோயின் ரேஞ்சுக்கு நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டது வருகிறது.