#image_title
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே மணிமேகலை. சமீபத்தில் நான்காவது சீசன் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இவர் விலகினார். அந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இவரின் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஒருபுறம் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி வந்தனர்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தங்களின் சொந்த நிலத்தில் வீடு கட்டும் வேலையில் மணிமேகலையும் அவரின் கணவரும் பிசியாக உள்ளனர். இவர் டான்சர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் வேறு மதம் என்பதால் மணிமேகலை வீட்டில் கடும் எதிர்ப்பு வந்த நிலையில் அதை மீறி தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்களது வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அவ்வப்பொழுது எதாவது செய்து அதனை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தொலைக்காட்சி மூலம் மட்டுமின்றி இவர் யூடியூப் மூலமும் சம்பாதித்து வருகிறார். அவரின் வீடியோக்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல ரீச் கிடைக்கும். தற்பொழுது இவரது யூடுயூப் வருமானம் குறித்த தகவல்கள் தான் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு மாதத்திற்கு ரூ.59,000 இவருக்கு வருகிறதாம்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…