கோவை மாவட்டம் மாதம்பட்டியில் மாதம்பட்டி பாகசாலா என்ற பெயரில் கார்ப்பரேட் சமையல் நிறுவனத்தை நடத்தி வருபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் ஹீரோதான் இவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகின்றார்.
இவர் சமையல் துறையில் பிரபலம் என்பதால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஏற்கனவே மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த இவர் தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதாவது நடிகர் யோகி பாபு உடன் இணைந்து மிஸ் மேகி என்ற திரைப்படத்தில் தான் தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார்.
ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் இசையமைத்துள்ளார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அதில் யோகி பாபு பெண் வேடத்தில் வருகின்றார். இதனைத் தொடர்ந்து படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.