அரசு ஊழியர்களுக்கு செக்…! பெற்றோரை தவிக்கவிட்டா சம்பளம் கட்…! இந்த ஐடியா நல்லா இருக்கே…!!

By Devi Ramu on தை 14, 2026

Spread the love

தெலங்கானாவில் முதியோர்களைப் பாதுகாக்க அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, அரசுப் பணியில் இருப்பவர்கள் தங்களது பெற்றோரைச் சரியாகக் கவனிக்கத் தவறினால், அவர்களின் மாதச் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதத் தொகை தானாகவே கழிக்கப்பட்டு பெற்றோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கெனத் தனிச் சட்டம் விரைவில் இயற்றப்பட உள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளைத் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகளுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கவும் புதிய முறையை முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இனி வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறினால், அவர்களுக்கான அபராதத் தொகை உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பிடித்தம் செய்யப்படும் ‘ஆட்டோ-டெபிட்’ முறை அமல்படுத்தப்பட உள்ளது. குடிப்போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதத்தில் எந்தச் சலுகையும் கிடையாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோரைத் தவிக்கவிடும் அரசு ஊழியர்களுக்குக் கடிவாளம் போடும் இந்தத் திட்டம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.