மழையில் நனைந்தபடி உணவுப் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு டெலிவரி ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். மழை காரணமாக உணவு வந்து சேரச் சிறிது தாமதமானதால், அந்தப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்த வாடிக்கையாளர் “உணவு ஆறிப்போய்விட்டது, எனக்கு இது வேண்டாம்” என்று கூறி உணவை வாங்க மறுத்துவிட்டார்.
இதனால் மனமுடைந்த டெலிவரி ஊழியர், “எங்களைப் போன்ற ஏழைகளுக்கு உணவின் மதிப்பு தெரியும். தாமதமானதற்கு எங்கள் நிலைமைதான் காரணம், ஆனால் அதை யாரும் புரிந்து கொள்வதில்லை” என்று ஆதங்கப்பட்டார். தொடர்ந்து, அந்த உணவிற்கான பணத்தை தன் சொந்தக் கணக்கிலிருந்து செலுத்துவதாகக் கூறி, உணவை வீணாக்காமல் வாடிக்கையாளரின் வீட்டெதிரேயே அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். இச்சம்பவம் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி, உழைக்கும் ஊழியர்களின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளாத வாடிக்கையாளரின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
