ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கில் அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி அழைத்துச் சென்று, செல்லும் வழியிலேயே ஓடும் காரில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அளித்துள்ள புதிய புகார் இவ்வழக்கில் பெரும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
இப்புகாரின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு அச்சிறுமியிடம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதனிடையே, இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பிற நபர்களும் அச்சமின்றி புகார் தெரிவிக்க 9345319676 என்ற தொலைபேசி எண்ணை காவல்துறை அறிவித்துள்ளதுடன், புகார் அளிப்பவர்களின் அடையாளமும் தகவல்களும் முற்றிலும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
