“என் பொண்டாட்டி தான் கிப்ட்”… ரீல்ஸ் போட்ட வாலிபர்… அடுத்த நொடியே நடந்த பயங்கரம்… சென்னையை உலுக்கும் சம்பவம்…..!

By Nanthini on தை 17, 2026

Spread the love

சென்னையை அடுத்த திரிசூலம் பகுதியில் செல்வக்குமார் என்ற 22 வயது வாலிபர், ரீனா மற்றும் ரஜிதா என்ற இரு பெண்களுடன் பழகி வந்த நிலையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரீனாவுடன் குடும்பம் நடத்தி வந்த செல்வக்குமார், அவரது தோழியான ரஜிதாவுடனும் நெருக்கம் காட்டியுள்ளார். இந்த சூழலில், அந்தப் பெண்கள் இன்ஸ்டாகிராம் மூலம் பல ஆண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிப்பதையும், தவறான பாதையில் செல்வதையும் அறிந்த செல்வக்குமார், அவர்களைக் கண்டித்துள்ளார். தங்களின் ஜாலியான வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த செல்வக்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த அந்தப் பெண்கள், சமாதானம் பேசுவதாகக் கூறி அவரை பூங்காவிற்கு வரவழைத்துள்ளனர்.

மது போதையில் இருந்த செல்வக்குமாரை, அந்தப் பெண்களின் நண்பர்களான 17 வயது சிறுவன் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். ஆத்திரம் அடங்காமல் அவரது மர்ம உறுப்பையும் அறுத்து எறிந்ததில், செல்வக்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது மனைவிதான் தனக்குக் கிடைத்த பெரிய பரிசு என்று சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட அதே வாலிபர், அதே பெண்ணின் சதியால் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரீனா, ரஜிதா மற்றும் ஒரு சிறுவன் உட்பட மூன்று பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.