நீ எல்லாம் ஒரு பெத்த தாயா…. பிறந்து 9 மணி நேரமே ஆன சிசுவுக்கு நேர்ந்த கொடூரம்…. நெஞ்சை உலுக்கும் விழுப்புரம் சம்பவம்….!

Spread the love

விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து ஒன்பது மணி நேரமே ஆன பெண் குழந்தையைப் பெற்ற தாயே அவரது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, ஏரியில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் விழுப்புரத்தைச் சுற்றி அரங்கேறியுள்ள இந்த மனிதாபிமானமற்ற செயல், கள்ளத்தொடர்புகளால் ஏற்படும் குடும்பச் சீரழிவின் உச்சக்கட்ட சான்றாக மாறியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் காணைகுப்பம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதாவிற்கு, அதே ஊரைச் சேர்ந்த யோகலிங்கம் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூலை 7-ம் தேதி சுதாவிற்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நான்காவது குழந்தையாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தெரிவிக்காமல் அன்று இரவே சுதா குழந்தையுடன் திடீரென வெளியேறியதால், சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் மற்றும் அனைத்து மகளிர் காவல் துறையினர் சுதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் குழந்தையை ஒருவரிடம் ஒப்படைத்ததாகவும், சுடுகாட்டில் வீசியதாகவும் சுதா முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறி போலீசாரை திசை திருப்ப முயன்றார். ஆனால், போலீசார் தங்களது பாணியில் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளக்காதலன் யோகலிங்கத்துடன் சேர்ந்து குழந்தையை அகரம் சித்தாமூர் ஏரியில் வீசி கொலை செய்ததை சுதா ஒப்புக்கொண்டார்.

தன் கணவர் சுரேஷ் சென்னையில் இருக்கும் வேளையில், கள்ளக்காதலன் மூலமாகப் பிறந்த இந்தக் குழந்தை குறித்து கணவருக்குத் தெரிந்தால் குடும்பத்தில் பெரிய பிரச்சினை வெடிக்கும் என்ற பயத்திலேயே இந்தக் கொலையைச் செய்ததாக சுதா வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தத் தகவலின் பேரில் ஏரியில் இருந்து குழந்தையின் உடலை மீட்ட போலீசார், சுதா மற்றும் யோகலிங்கம் ஆகிய இருவரையும் உடனடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

SATHISH R

Recent Posts

“பிஞ்சு குழந்தைகள் கண்முன்னே கொடூரம்…” கதறி துடித்த ஆசிரியை… வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கொன்ற வாலிபர்…. திக் திக் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில், கடந்த திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் 26…

29 minutes ago

ஹோட்டலில் ரூமில் காதலர்கள்…! “அவ செத்துட்டா…” மறு நொடியே மாயமான காதலன்…. தலை, முகத்தில் படுகாயத்துடன் காதலி…. பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம்பெண், தனது காதலன் ஸ்ரீனிவாச ரவி தேஜா…

41 minutes ago

“அலறிய 3 மாத கர்ப்பிணி மனைவி…” கழுத்தை அறுத்து கொலை செய்து மாடியில் இருந்து குதித்த கணவர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வாடகை அறை ஒன்றில், 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் என்பவர், 3 மாத…

1 மணத்தியாலம் ago

“கோழைகளும் துரோகிகளுமே அப்படிச் சொல்வார்கள்”…. அமெரிக்க ஆயுதப் பற்றாக்குறை வதந்திக்கு அதிபர் ட்ரம்ப் ஆவேசப் பதிலடி…!

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…

1 மணத்தியாலம் ago

“அன்பிற்குரியவர் தான்… ஆனா இது லூசுத்தனமான விமர்சனம்”…. உதயநிதியை பொளந்து கட்டிய திருமாவளவன்….!

திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…

2 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்…. சிறுநீரகங்கள் செயலிழக்கும் ஆபத்து… மாத்திரை சாப்பிடும் முன் மத்திய அரசு வெளியிட்ட பகீர் எச்சரிக்கை….!

வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…

2 மணத்தியாலங்கள் ago