அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… பெற்ற மகளை 6 மாத கர்ப்பமாக்கிய கொடூரத் தந்தை… காவல் நிலையத்தில் விபரீத முடிவு… மதுரையில் அரங்கேறிய சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 16, 2026

Spread the love

மதுரை மாநகரப் பகுதியைச் சேர்ந்த 15 வயது அரசுப் பள்ளிச் சிறுமி ஒருவர், மருத்துவப் பரிசோதனையின் போது 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மதுரை தெற்கு வெளிவீதி பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அச்சிறுமியின் தந்தையே சொந்த மகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அவரை 6 மாத கர்ப்பமாக்கியது வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை மாலை சிறுமியின் பெற்றோரை போலீசார் காவல் நிலையத்திற்கு நேரில் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

   

காவல் நிலைய விசாரணையின் போது, தன் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டதை உணர்ந்த தந்தை திடீரெனத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அவரை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.