திருவாரூர் மாவட்டம் தென்னவராயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (36). வெளிநாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு சமீபத்தில் ஊர் திரும்பிய இவருக்கும், அகரத்திருநல்லூர் காமராஜர் நகரைச் சேர்ந்த செல்வராஜின் மகள் செமிலா (29) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. செமிலா கோவை பட்டாலியனில் மத்திய ரிசர்வ் காவல் படை காவலராகப் பணியாற்றி வருகிறார். ராஜமாணிக்கம் வெளிநாட்டில் இருந்த காலத்தில், செமிலா, அவரது தாய் சசிகலா மற்றும் சகோதரர் கோகுல்ராஜ் ஆகியோரின் வங்கி கணக்குகளுக்குத் தவணை முறையில் மொத்தம் ரூ.15.37 லட்சம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், தனக்கு வேறு நபருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட செமிலா, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த மற்றொரு காவலரைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜமாணிக்கம், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, செமிலாவும் அவரது குடும்பத்தினரும் பணத்தைப் பறித்துவிட்டதாகத் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜமாணிக்கம் ஏமாற்றப்பட்டது உண்மை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பெண் காவலர் செமிலா, அவரது தாய் சசிகலா மற்றும் சகோதரர் கோகுல்ராஜ் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில், தாய் சசிகலாவைத் திருவாரூர் சிறையிலும், சகோதரர் கோகுல்ராஜை நாகப்பட்டினம் சிறையிலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதேவேளையில் செமிலாவிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிப் பண மோசடியில் ஈடுபட்ட பெண் காவலர் உட்பட அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்ட இச்சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஏர்டெல் நிறுவன ஊழியரான அஜித் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
சென்னை கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்த பூவரசி என்பவர், கணவர் தீபக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனது…
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற 'ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம்' தனது 36 ஆண்டுகால நீண்ட பயணத்தை…
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண், மங்களகிரியில் பணிபுரிந்தபோது கௌஸ் முகைதீன் என்பவரைக் காதலித்து திருமணம்…
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம், தினமும் புதுப்புது திருப்பங்களுடன் அரசியல் சூட்டை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து…
அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 22 வயது இளம் பெண் ஹ்ரிஷிதா லஹோன், டெல்லியில் உள்ள மைத்ரேயி கல்லூரியில் ஆங்கில…