BREAKING: தமிழகத்தில் பறவை காய்ச்சல்?… சற்றுமுன் பொதுமக்களுக்கு அரசு அவசர உத்தரவு….!

By Nanthini on மாசி 5, 2026

Spread the love

சென்னை அடையாறு பகுதியில் சமீபத்தில் காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதற்கு ‘பறவைக் காய்ச்சல்’ (H5N1) தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் காகங்களின் மாதிரிகளைப் பரிசோதித்து, இந்தத் தொற்றை உறுதி செய்து தமிழகத் தலைமைச் செயலருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளது. பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொற்று மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், அரசுத் தரப்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயிரிழந்த பறவைகளை ஆழமாகத் தோண்டி புதைக்கவும், கோழிப் பண்ணைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் காகங்கள் அல்லது இதர பறவைகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டால், உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும், சுகாதார முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.