கட்டுக்கடங்காத கூட்டம்…. சபரிமலையில் பக்தர்கள் 9 பேர் உயிரிழப்பு… அடுத்தடுத்து சோகம்….!

By Nanthini on கார்த்திகை 27, 2025

Spread the love

எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் வழக்கத்தை விட சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று வருகின்றனர். கடந்த பத்து நாட்களில் மட்டும் எட்டு பேர் உடல்நல குறைவால் உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று கோவையை சேர்ந்த முரளி (50) என்ற பக்தர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். திடீரென மயங்கி விழுந்த அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சபரிமலையில் இதுவரை மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது