காகங்களை விரட்ட துப்பாக்கியுடன் காவல் நின்ற நபர்… அவருக்கு டைட்டிலிலும் பெயர் – தியாகராஜ பாகவதரின் படத்தில் நடந்த ருசிகர சம்பவம்!

By vinoth on புரட்டாதி 13, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர் என்றால் அது சந்தேகமே இல்லாமல் தியாகராஜ பாகவதர்தான். மொத்தமே 14 படங்கள் மட்டுமே நடித்த அவர் அன்றைய தமிழக மக்களால் உச்சிமுகர்ந்து கொண்டாடப்பட்டார். அவர் நடித்ததில் 7 படங்கள் ப்ளாக்பஸ்டர் படங்கள்.

ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற வந்த பின்னர் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆகின. அப்போது சினிமாவிலும் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நடந்தது. அதை உள்வாங்காமல் தன்னுடைய பழைய ஸ்டைலிலேயே பாகவதர் நடித்தது ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. பின்னர் உடல்நலக் குறைவால் கண்பார்வையிழந்து அவர் இறந்தது எல்லாம் காவிய சோகம் நிறைந்த துயர நாடகம்.

   

புகழ்பெற்ற நாடக நடிகராக இருந்த தியாகராஜ பாகவதர் முதல் முதலாக நடித்த திரைப்படம் பவளக்கொடி. அவர் நடித்த ஹிட்டான நாடகத்தின் மறுவடிவம்தான். அந்த காலத்தில் ஒலிப்பதிவு தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடையாததால் படப்பிடிப்பின் போதே பாடல்கள் மற்றும் வசனங்களை ஒலிப்பதிவு செய்வார்களாம்.

   

அந்த படத்தின் ஷூட்டிங் வெளிப்புறங்களில் நடக்கும் போது உணவுப் பொட்டலங்கள் இருந்த இடங்களை நோக்கி அதிகளவில் காக்கைகள் பறந்துவந்து அவற்றை சாப்பிட முயன்றுள்ளன. இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதால் காகங்களை விரட்ட துப்பாக்கியோடு ஜோ என்ற ஆங்கிலொ இந்தியர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார். வெளிப்புற படப்பிடிப்புகள் நடந்த அனைத்து நாட்களிலும் இவர் இப்படி காவலுக்கு நின்றுள்ளார்.

 

இதனால் இவருக்குப் படத்தின் டைட்டில் கார்டில் crowshooter என்ற பிரிவில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். இதை தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்ரன் தன்னுடைய எழுத்துகளில் பதிவு செய்துள்ளார். இதே போல ஆரம்ப காலகட்ட மௌனப் படங்களில் சில முக்கியமான வசனங்கள் மட்டும் ஸ்லைடில் போடப்படுமாம். அதிகம் படிப்பறிவில்லாத மக்களுக்கு அவற்றை படித்து சொல்வதற்கென்றே ஒருவர் பணியில் அமர்த்தப்படுவாராம். அவருக்கு அப்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் மரியாதை இருந்ததாம்.